அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கி இருக்கின்றான் அல்லாஹ் தன்னுடைய திருமறையில்
அத்தியாயம் 16 வசனம் 18 டில் குறிப்பிடுகிறான் وإن تعدوا نعمة الله لا تحصوها ۗ إن الله لغفور رحيم அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கக்கூடிய அருட்கொடைகளை பாக்கியங்களை எண்ண ஆரம்பித்தால் அவற்றை எண்ணி முடிக்க முடியாது. அவன் அளித்திருக்கக்கூடிய பாக்கியம் சிறியதானாலும் பெரியதானாலும் எல்லாமே அல்லாஹ் கொடுத்தது இதையும் தன்னுடைய திருமறையில் குறிப்பிட்டு காட்டுகின்றான் அத்தியாயம் 16 வசனம் 53 னில்وَمَا بِكُم مِّن نِّعْمَةٍۢ فَمِنَ ٱللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيْهِ تَجْـَٔرُونَ உங்களுக்கு அருளப்பட்ட அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது அது எந்த வகையான அருட்கொடைகளாக இருந்தாலும் சரிதான் இந்த அருட்கொடைகளுக்கு நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும் நாம் நன்றி செலுத்தினால் தான் அதை அல்லாஹ் மென்மேலும் அதிகப்படுத்தி தருவான் அல்லாஹுத்தஆலா தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 14 வசனம் 7லில்
وإذ تأذن ربكم لين شكرتم لأزيدنكم
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினால்அந்த அருட்கொடையை அதிகப்படுத்தி தருவான் என்பதற்கு எண்ணற்ற நிகழ்வுகள் உண்டு அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை குறித்து பல இடங்களில் பேசுகின்றான் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக குர்ஆன் கூறுகிறது அத்தியாயம் 27 வசனம் 40 قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ இது என் இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த அருட்கொடை நான் நன்றி செலுத்துகிறேனா இல்லையா என்பதை சோதிப்பதற்காகவே இதை அருளியுள்ளான் என்று கூறி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நன்றி செலுத்தினார்கள்