கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே நம்முடைய தாய் நாடான இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது இந்த சுதந்திர தின விழா நமக்கு உணர்த்தக்கூடிய தகவல் என்னவென்றால் நாம் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்து அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு இன்று சுதந்திரமாக அனைத்தையும் செய்து கொண்டிருகின்றோம் என்பதையும் மேலும் அந்த தேசியக்கொடி நமக்கு உணர்த்தக்கூடியது இந்த நாட்டில் எந்த சமயத்தவரும் எந்த மதத்தை சார்ந்தவரும் தங்களுடைய சடங்குகளை நிறைவேற்றுவதில் யாரும் குறுக்கிட முடியாது எந்த அரசாங்கமும் மூக்கு நுழைக்க முடியாது என்பதையே அந்த தேசிய கொடியின் நிறங்கள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது இந்நேரத்தில் நம்முடைய நாடு மிக மோசமான நிலையில் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் சிறுபான்மையின மக்கள் ஏழை எளிய மக்கள் இந்நாட்டில் வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்கள் என்பது போல் அரசியல் நிலவரம் சென்று கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயமாகும் இந்த சுதந்திர தின விழா கொண்டாடப்படக்கூடிய இந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் ஆகிய நாம் இந்த நாட்டினுடைய விடுதலைக்காக என்னென்ன தியாகங்கள் செய்திருக்கின்றார்கள் என்பதை குறித்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் குறிப்பிட்டு காட்டுகின்றேன் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் ஏறத்தாழ ஐந்து லட்சம் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் விடுதலைக்காக வேண்டி தங்களுடைய இன்னுயிரையும் ஈர்த்திருக்கின்றார்கள் டெல்லியில் இருந்து லாகூர் வரையான ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைதூரம் வரை உள்ள எல்லா மரங்களிலும் இஸ்லாமியர்களின் பிணங்கள் தொங்கவிடப்பட்டது இதுவின்றி 800 ஆண்டு காலம் இஸ்லாமியர்கள் இந்த இந்தியாவில் ஆட்சி செய்திருக்கின்றார்கள் அந்த இஸ்லாமிய அரசியல்வாதிகள் எல்லோரும் மதச்சார்பற்ற அரசியலையே செய்தார்கள் எத்தனையோ கோயில்களுக்கு மானியம் வழங்கிய நிகழ்வுகளும் உண்டு கட்டிக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு ஆனால் இவற்றையெல்லாம் ஊடகம் மறைத்து பொய்யையும் பிதற்றளையுமே முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றது 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை துவங்கி வைத்து மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக திருப்பி விட்டவர்களும் முஸ்லிம்கள் தான் மேலும் ஒத்துழையாமை என்ற இயக்கத்தை துவங்கி ஆங்கிலேயர்களின் உடைய சட்டதிட்டங்களை பின்பற்றக் கூடாது எனும் விஷயத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு பிழைப்பு நடத்த வந்தபோது கிழக்கிந்திய கம்பெனிகள் இந்த நாட்டில் வேரூன்றிய போது அவர்களுக்கு ஆட்சியினுடைய ஆசை வந்ததை அறிந்து முதன்முதலாக முஸ்லிம்கள் தான் எதிர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக இருந்து கொண்டிருக்கின்றது சிராஜுத் தவ்லா ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கின்றார் இமாம் ஷா வலியுல்லாஹ் தெகலவி (ரஹ்) அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பல மார்க்க தீர்ப்புகள் வழங்கி மக்களை போர் செய்ய எதிர்த்துப் போராட உற்சாகப்படுத்தி ஆங்கிலேயர்களை எதிர்ப்பது மார்க்க கடமை என்று எழுத்துப்பூர்வமாக உரையாடல்கள் மூலமாக மக்களிடம் சென்று சேர்த்து தன்னுடைய உயிரையும் அர்ப்பணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சையத் அஹ்மத் சஹீர் இஸ்மாயில் ஷகீம் ஆகிய இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி ஆப்கானிஸ்தானை வென்றெடுத்தார்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்கள் செய்த சூழ்ச்சியால் மீண்டும் முஸ்லிம்களின் கையில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்றது அந்த இரு அறிஞர்களும் பாலக்கோடு என்ற இடத்தில் கொல்லப்பட்டார்கள் இப்படி ஏராளமான அறிஞர்களும் ஏராளமான இஸ்லாமிய பிரமுகர்களும் இஸ்லாமிய மக்களும் இந்த இந்தியாவினுடைய விடுதலைக்காக வேண்டி ரத்தங்களை சிந்தினார்கள் ஏராளமான பொருள் உதவியும் செய்து இருக்கின்றார்கள் என்பதெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம் மைசூரில் 17 92 இல் நடந்த யுத்தத்தில் ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்புசுல்தான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது லத்திப்பு சுல்தான் அவர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு படுதோல்வியை கொடுத்தார் திப்பு சுல்தானிடம் ஆங்கிலேயர்களிடமிருந்து அளவிற்கு படைபட்டாளமோ போர் செய்வதற்கு தேவையான ஆயுத கிடங்குகளோ இல்லாத நிலையிலும் தன்னுடைய மனோ தைரியத்தாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கக் கூடிய அந்த ஈமானாலும் ஆங்கிலேயர்களை படு கேவலமாக தோற்கடித்தார் ஆனால் இன்று அந்த திப்பு சுல்தான் அவர்களை தான் தேச துரோகி என்பதாக குற்றம் சாட்டுகின்றது கோயிலை இடித்தார் என்பதே போன்ற பொய் வதந்திகளையும் அள்ளி விடுகின்றது ஆனால் இன்றைக்கும் கூட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோவிலுக்கு திப்பு சுல்தான் கொடுத்த மானியம் அங்கு எழுதப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும் இப்படி ஏராளமான நன்மைகளை செய்த திப்பு சுல்தான் அவர்களை 179 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஒரு மிகப்பெரிய ஒரு சூழ்ச்சியை செய்து திப்பு சுல்தான் அவர்களை கொன்றார்கள் இந்த திப்பு சுல்தான் கொன்ற பிறகு தான் ஆங்கிலேயர்கள் இனி இந்தியா நமக்கானது நம்முடைய தேசம் என்பதாக மாறு தட்டிக் கொண்டிருந்தது அந்த அளவிற்கு சுற்று சுல்தான் மாபெரும் வீரராக திகழ்ந்திருக்கின்றார் திப்பு சுல்தான் இறந்த பிறகு பல அரசர்கள் பல அறிஞர்கள் பல குருநல மன்னர்கள் ஆங்கிலேயர்களால் மிக மோசமான நிலையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அடுத்து ஒரு நிகழ்வு சேகுல் ஹிந்து மஹ்மூதுல் ஹசன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல இயக்கங்களை துவங்கியும் மக்களை போராட்ட களத்தில் குதிக்க வைத்தார்கள் இறுதியாக இமாம் மதீனா சென்ற போது ஆங்கிலேயர்கள் அங்கிருக்க கூடிய ஆட்சியாளர்களை தமது கைக்குள் போட்டு முஹம்மது அல்ஹசன் அவர்களை சிறைபிடித்தது பல ஆண்டுகாலம் மால்டா சிறையிலே தங்கி இருந்தார்கள் நேரத்தில் அவர்களுடைய மாணவர்களும் சிறைபிடிக்கப்பட்டு இருந்தார்கள் அங்கு ஏராளமான துன்பங்கள் அவர்களுக்கு நிகழ்ந்தது அவர்களை துன்பப்படுத்தும் போதெல்லாம் இப்படியான வார்த்தையை குறிப்பிட்டு காட்டுவார்கள் நான் பிலால் உடைய வாரிஸ் நான் ஹூபைப் வுடைய வாரிஸ் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள் இறுதியாக மால்டா சிறையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தங்களுடைய மாணவர்களிடம் தனக்கு சிறையில் நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள் பிறகு இமாம் அவர்கள் மரணிக்கும் பொழுது அவர்களுடைய தொடை பகுதியை பார்த்து மிகவும் கவலை பட்டார்கள் அப்பொழுது ஹுசைன் அஹமத் மதனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான் இதற்கு காரணம் இமாம் மால்டா சிறையில் அடைக்கப்பட்ட போது இதுவரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக என்னென்ன மார்க்க சட்டங்கள் வழங்கினாரோ அவற்றையெல்லாம் கழியும்படி கேட்டனர் ஆனாலும் இமாம் ஒத்துக் கொள்ளவில்லை ஆகையால் ஆங்கிலேயர்கள் நன்கு காய்ச்சப்பட்ட இரும்பை கொண்டு இமாமுடைய தொடை பகுதியில் சூடு போட்டார்கள் அதனால் தொடை பகுதியில் சதையே இல்லாமல் ஆகிவிட்டது என்று சொல்லிக் காட்டினார் இதை கேட்ட மக்கள் மிகவும் துயரப்பட்டார்கள் இப்படி இந்த இந்தியாவினுடைய சுதந்திரத்திற்காக வேண்டி பல தியாகங்களை பொருளியல் ரீதியான உயிர் ரீதியான இன்னும் எத்தனை வகையில் தியாகம் செய்ய முடியுமோ அர்ப்பணிக்க முடியுமோ இந்த சுதந்திரத்திற்காக வேண்டி அர்ப்பணித்து இருக்கின்றார்கள் இஸ்லாமியர்கள். ஆனால் இன்றைக்கு அவையெல்லாம் மறைக்கப்பட்டு முஸ்லிம்களை தேச விரோதியாக பயங்கரவாதியாக மீடியாக்கள் முத்திரையிட்டு அவ்வப்போது கொக்கரித்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய இந்த இஸ்லாமியர்களுக்கு செய்யக்கூடிய துரோகமாக இருக்கின்றது ஆனால் இந்த நாட்டிற்காக எந்த தியாகமுமே செய்யாத அரசியல்வாதிகள் தான் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வேதனை கூறியது இந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் எப்படி எல்லாம் தியாகம் செய்தார்கள் என்பதை குறித்து மட்டும் பேசி பெருமை கொள்வதற்காக அல்ல நாம் என்ன செய்தோம் இந்த சமுதாயத்திற்காக இங்குள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல இன்னல்களுக்கும் பல துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய மக்களுக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை குறித்து சற்று யோசித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம் கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இனி வரக்கூடிய காலம் மிக மிக ஆபத்தான காலம் இஸ்லாமியர்களை இந்நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உண்டான எல்லா வேலைகளும் திரை மறைவில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு நாளும் இதுகுறித்து ஆலோசிக்கப்படுகிறது ஆனால் நம்முடைய வாழ்க்கை மிகக் குறுகிய வட்டத்தில் குடும்பம் பிள்ளைகள் வீடு வியாபாரம் என அது சார்ந்த கவலைகளோடு மட்டும்தான் நாம் இருக்கின்றோம் பல ஹோட்டல்களை எழுப்புகின்றோம் ஆனால் அவையெல்லாம் அரசாங்கம் போடக்கூடிய ஒரு சட்டத்தால் ஒரே நேரத்தில் அப்படியே சுருட்டி விட்டு போகக்கூடிய நிலையும் இருக்கின்றது இனியாவது நாம் படிப்பினை பெற்று இந்த சமுதாயத்திற்காக நம்முடைய இந்த நாட்டின் இருப்புக்காக என்ன விஷயங்களை செய்ய வேண்டுமோ அவற்றை நாம் செய்ய வேண்டும் அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது சமுதாய ஒற்றுமை எந்த மதமாக இருந்தாலும் இப்படிப்பட்ட நபராக இருந்தாலும் அவரையும் அரவணைத்து வாழக்கூடிய மக்களாக நாம் மாற வேண்டும் எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஒரு யூதனுடைய ஜனாஸா சென்றபோது கூடி இருந்த தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே இது யூதனுடைய ஜனாசா தானே நீங்கள் ஏன் இழந்து நிற்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் اليست نفسا அது ஒரு உயிர் இல்லையா என்பதாக கேட்டார்கள் இப்படியான பார்வை தான் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டும் ஒருவனை அவன் என்ன மதம் அவன் என்ன ஜாதி அவன் என்ன இனத்தை சார்ந்தவன் என்ன வேலை செய்கிறான் என்பதை எல்லாம் பார்ப்பதை நிறுத்திவிட்டு அவன் ஒரு மனிதன் என்ற கண்ணோட்டத்தோடு அது ஒரு உயிர் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் குர்ஆனிலும் அல்லாஹுத்தஆலா கூறுகிறான் ஒரு ஆன்மாவை கொல்வது 100 ஆன்மாக்களை கொல்வதற்கு சமம் என்பதாக குறிப்பிடுகிறான் அதில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என்ற எந்த பாகுபாட்டையும் அல்லாஹ் குறிப்பிடவில்லை உயிர் அது யாருடைய உயிரானாலும் சரிதான் இந்த பார்வை இந்த நாட்டு மக்களுக்கு குறிப்பாக நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கு வருமே ஆனால் இந்த நாட்டில் நடக்கக்கூடிய சிறுபான்மையினருக்கு எதிரான எல்லா சட்டங்களையும் ரத்து செய்து விடுவார்கள் எப்படி ஒரு குடும்பம் நன்றாக இருக்க கணவன் மனைவி உறவு சீராக இருக்க இருவரும் இணக்கமாக ஐக்கியமாக இருந்தால் தான் நல்ல சந்தோஷமாக இருக்க முடியுமோ அதே போல் தான் சமூக ஐக்கியத்தின் மூலம் நாட்டு மக்களின் ஐக்கியத்தின் மூலம் மதச்சார்பின்மையின் மூலம் இந்த நாடு வளம் பெற முடியும் இல்லையென்று சொன்னால் மிக மோசமான நிலையில் தான் சென்று விடும் நாம் நீ கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம் நம்முடைய இந்தியாவினுடைய பொருளாதாரம் எந்த அளவிற்கு அதல பாதாளத்தில் சென்று விட்டது ஜிடிபி உம் குறைந்து கொண்டே போகின்றது இப்படி ஒற்றுமையின்மையால் பல இழப்புகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டே இருக்கின்றோம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகு முதன்முதலாக அக்கம் பக்கத்தில் இருக்கக்கூடிய யூதர்களை அழைத்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் இதுவெல்லாம் ஒரு முன்னேறுப்பாடாகும் ஆக கண்ணியத்திற்குரிய தான் அல்லாஹ்வின் நல்லடியார்களே நான் ஒன்று பட்டால் தான் எல்லா விதமான நன்மைகளையும் பார்க்க முடியும் சொல்லிக் காண்பிப்பார்கள் எதுலாகி அலல் ஜமாஅத் அல்லாஹ்வினுடைய உதவி ஒரு கூட்டத்தின் மீது உள்ளது என்பதாகும் சொல்லிக் காண்பிப்பார்கள் இன்னொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து கேட்கின்றார் அல்லாஹ்வின் தூதரே வீட்டில் அபிவிருத்தி இல்லை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகிறீர்களா அதற்கு அவர் ஆம் என்றார் அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் كلوا جميعًا ولا تفرقوا என்று சொன்னார்கள் ஆக அல்லாஹுத்தஆலா இந்த சமுதாயத்தின் உடைய ஒற்றுமைக்காக நம்மையும் அதன் நன்மையை அடைய இணைத்துக் கொள்வானாக என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்
No comments:
Post a Comment